Monday, September 30, 2013

TET SPECIAL EXAM

          மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். 
இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்டபேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Wednesday, September 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு:இடஒதுக்கீடு கிடையாது

      ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அவர்வால், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால் தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

Saturday, September 21, 2013

GROUP-I MAINS EXAM POSTPONED

டி.என்.பி.எஸ்.சி சார்பி்ல் நடக்க உள்ள குரூப் -1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தியி்ல், குரூப்-1 க்கான முதன்மை தேர்வு செப். 27, 28, மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க விருந்ததது. தற்போது முதன்ம‌ை தேர்வு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 4, 2013

GROUP-II தேர்வு அறிவிப்பு

GROUP-II தேர்வு அறிவிப்பு -1064 பணியிடங்கள் 
    TNPSC நடத்தும் குரூப் 2 முதனிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது மொத்தம் 1064 நேர்முகத்தேர்வு பணியிடங்களுக்கான தேர்வு 2013 டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செப்டம்பர் 6-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 4, 2013. MAIN தேர்வுக்கு 1064*10=10640 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். முதனிலைத் தேர்வு (PRELIMS) கொள்குறிவகை வினாக்களைக் (OBJECTIVE) கொண்டதாக இருக்கும். தேர்வு பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Followers