Tuesday, October 29, 2013

2013 TET RESULTS PUBLISHED


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு 


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு:  ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  அறிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் (ஆகஸ்ட் 18) தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
இரண்டு மாதங்களில் முடிவுகள்:
தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தாள் ஒன்றினை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரும், தாள் இரண்டினை 4 லட்சத்து 311 பேரும் எழுதினர். இதில் தாள் ஒன்று தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை 12 ஆயிரத்து 596 பேர் பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 4.80 சதவீதமாகும். அதில், ஆண்களின் தேர்ச்சி 4.56 சதவீதமாகவும், பெண்களின் தேர்ச்சி 4.88 சதவீதமாகவும் உள்ளது.
மொழிப்பாடங்களில் எத்தனை பேர்:
மொழிப் பாடங்களைப் பொறுத்தவரையில், தாள் ஒன்றில் தமிழ் மொழியில் 12 ஆயிரத்து 433 பேரும், தெலுங்கில் 106 பேரும், மலையாளத்தில் 20 பேரும், உருதுவில் 23 பேரும், கன்னடத்தில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் ஆண்களின் ஆதிக்கம்:
பட்டதாரிகள் அதிகளவில் பங்கேற்ற தாள் இரண்டினைப் பொறுத்தவரையில், 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 14 ஆயிரத்து 496 பேர். தேர்ச்சி சதவீதம் 3.62. தாள் ஒன்றில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் இரண்டினைப் பொறுத்தவரையில் ஆண்களே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 4.16 ஆக உள்ளது. பெண்கள் 3.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் தமிழ் மொழியில் 14 ஆயிரத்து 363 பேரும், தெலுங்கில் 107 பேரும், மலையாளத்தில் 10 பேரும், உருதுவில் 6 பேரும், கன்னடத்தில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Sunday, October 13, 2013

PG TRB C.V CENTRES @ DATE

TEACHERS RECRUITMENT BOARD CERTIFICATE VERIFICATION CENTERS LIST
CERTIFICATE VERIFICATION DATES : 22.10.2013 and 23.10.2013

Note : The Call Letter and other relevant forms will be uploaded in website  only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

1  KANYAKUMARI TIRUNELVELI THOOTHUKUDI
SLB GOVT. HR. SEC. SCHOOL,
NAGERCOIL, KANYAKUMARI DT -629001,
PH. NO. 04652 -232867    
2  RAMANATHAPURAM SIVAGANGAI PUDUKKOTTAI 
GOVT. HR.SEC. SCHOOL,
MARUTHUPANDIYAN NAGAR,
COLLECTOR OFFICE COMPUS,
SIVAGANGAI-630562
PH. NO. 04575-240759, CELL: 9994836771    
3  MADURAI VIRUDHUNAGAR    
SRI MEENAKSHI SUNDARESWARAR GIRLS HSS,
TEPPAKULAM,
MADURAI -625 009
PH. NO. 0452-2311169 
4  DINDIGUL THENI    
JOHN PAUL HR. SEC., SCHOOL,
DINDIGUL -624 001,
PH.NO. 0451 -2421037 
5  COIMBATORE THE NILGIRIS TIRUPPUR    
PRESENTATION CONVENT GOVT. HSS,
NEAR HPO,
COIMBATORE -641001 PH.NO. 0422-2392458, CELL : 9443000648 
6  NAMAKKAL KARUR 
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
NAMAKKAL -637001,
PH.NO. 222555,
CELL : 9489900307 
7  DHARMAPURI 
ADIAMAN ARASU BOYS HR. SEC. SCHOOL,
DHARMAPURI-636701.
PH. NO. 7373773324   
8  TIRUCHIRAPALLI, ARIYALUR, PERAMBALUR    
BISHOP HEEPER HR. SEC. SCHOOL,
PUTHUR, TRICHY-18,
PH.NO. 9345286552 
9  TIRUVARUR NAGAPATTINAM THANJAVUR 
V.S BOYS HR. SEC. SCHOOL,
SOUTH BANK TIRUVARUR -610 001,
PH.NO. 04366 -240502    
10  VILLUPURAM CUDDALORE 
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
VILLUPURAM -605 602
PH. NO. 9488243734 
11  TIRUVANNAMALAI KRISHNAGIRI    
DANISH MISSION HR. SEC. SCHOOL,
TIRUVANNAMALAI -606 602
PH. NO. 9443815445 
12  VELLORE KANCHEEPURAM    
GOVT. MUSLIM HR. SEC. SCHOOL,
ANNA SALAI, VELLORE -632 001
PH. NO. 9360743154 
13  CHENNAI THIRUVALLUR    
FATHIMA MAT. HR. SEC. SCHOOL,
SAIDAPET,
CHENNAI -600 015
PH.NO. 23810627, CELL : 9884074728 
14  ERODE SALEM    
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
ERODE -638 001
            PH.NO. 0424 -2250940 

Saturday, October 12, 2013

PG TRB RESULT


 SELECTION LIST :http://trb.tn.nic.in/PG2013/11102013/Msg1.htm

     Subjectwise lists of candidates short listed for Certificate Verification, based on the Written Examination marks and Communal Rotation in the ratio of 1:1 are also released. In the case of Candidates obtained equal marks in the last communal turn, the senior in date of birth alone is called for certificate verification. Call letters for certificate verification along with necessary forms are uploaded in TRB website. Candidate have to take printouts of those things. No letter will be sent through post.

Saturday, October 5, 2013

இந்திய அரசியலமைப்பு

முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள்:

* 1-வது திருத்தம்(1951) வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்துப் பரிமாற்றம் மற்றும் எந்தப் பணியும் மேற்கொள்வது போன்றவற்றிற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு அனுமதி அளித்தது.
* 7-வது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட இத்திருத்தம் வகை செய்தது.
* 10-வது திருத்தம் (1960) தாத்ரா, நாகர் ஹவேலி போன்ற போர்ச்சுகீசிய காலனிகள் இந்திய ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டன.
*11-வது திருத்தம் (1961) - துணை குடியரசுத் தலைவரை தேர்ந்ேதெடுப்பதற்கான உரிமை பாராளுமன்றத்தின் இருசபைக்கும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போரில் காலியிடங்கள் உள்ளன என்று கூறி தேர்தலை எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.
* 12-து திருத்தம் (1962) - கோவா, டாமன்-டையூ போன்ற இடங்கள் மத்திய ஆட்சிப் பகுதிகளாக்கப்பட்டன.
*13-வது திருத்தம் (1962) - நாகாலாந்தை இந்தியாவின் 16-வது மாநிலமாக்கியது.
* 14-வது திருத்தம் (1962) - பாராளுமன்றத்திற்கு மத்திய ஆட்சிப்பகுதியில் சட்டப்பேரவைகளை உருவாக்க சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது. பாண்டிச்சேரி மத்திய ஆட்சிப்பகுதி ஆக்கப்பட்டது.
* 18-வது திருத்தம் (1966) - பஞ்சாபி மொழி பேசும்பகுதி பஞ்சாப் என்றும், இந்தி மொழி பேசும் ஹரியானா என்றும் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
* 21-வது திருத்தம் (1967) - சிந்தி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
* 24-வது திருத்தம் (1971) - அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. இத்திருத்தத்தின் சிறப்பம்சம் குடியரசுத் தலைவரின் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டதே.
* 26-வது திருத்தம் (1971) - பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. மத்திய ஆட்சிப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது.
* 35-வது திருத்தம் (1974) - சிக்கிம் இணை மாநில அந்தஸ்து பெற்றது.
* 36-வது திருத்தம் (1975) - சிக்கிம் இந்தியாவில் 22-வது மாநிலமாக உருவானது.
* 41-வது திருத்தம் (1976) - மாநில தேர்வாணையக் குழு உறுப்பினர்களின் உச்ச வயதுவரம்பு 60-லிருந்து 62-ஆக உயர்த்தப்பட்டது.
* 42-வது திருத்தம் (1976) - இதன் முக்கிய நோக்கம் சரண்சிங் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் செய்வதாகும். நீதித்துறையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. பாராளுமன்றம் மிகுந்த அதிகாரம் மிகுந்ததாக மாறியது. அடிப்படை உரிமைகள் பட்டியல் உருவாக்கப்பட்டது.
* 44-வது திருத்தம் (1978) சுருங்கக் கூறின் 42-வது திருத்தம் முழுவதுமாக திரும்ப்ப பெறப்பட்டது. சொத்துரிமை அடிப்படை உரிமை அன்று என்று குறிப்பிடப்பட்டது. உள்நாட்டுக் குழப்பங்களுக்காக அவசர நிலைப்பிரகடனம் செய்ய இயலாது. தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரை இரண்டு மாதத்திற்கு மேல் காவலில் வைக்க பரிசீலனைக் குழுவின் முன் அனுமதி பெற வேண்டும்.
* 55-வது திருத்தம் (1986) - அருணாச்சலப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்து பெற வகை செய்கிறது.
* 56-வது திருத்தம் (1987) - கோவாவுக்கு முழு மாநில அந்தஸ்து தரப்பட்டது. டாமன்-டையூ பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிப் பகுதியாக்கப்பட்டன.
* 58-வது திருத்தம் (1987) - அரசியலமைப்பின் அதிகாரப் பூர்வ இந்தி மொழி பெயர்ப்பை வெளியிட வகை செய்யும் திருத்தம்.
* 61-வது திருத்தம் (1989) - வாக்களிக்கும் வயது 21லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டது.
* 69-வது திருத்தம் (1991) - தில்லியை தேசிய தலைநகர ஆட்சிப்பகுதியாக அறிவித்தது.
* 70-வது திருத்தம் (1992) - தில்லி மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கியது.
* 71-வது திருத்தம் (1992) - கொங்கணி, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
* 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து இராஜ்யம் குறித்த விவரங்களைப் புகுத்தியது.
* 74-வது திருத்தம் (1992) - நகராட்சி குறித்த விவரங்களைப் புகுத்தியது.
* 86-வது திருத்தம் (2002) - 21-A என்ற புதிய ஷரத்தைப் புகுத்தியது. மேலும் ஷரத்து 45, 6 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கல்வி அளிக்கவும், மற்றும் சிறார் பருவத்திற்கான வாய்ப்புக்களை அளிப்பதிலும், போதிய கவனத்தை அரசு செலுத்த வேண்டுமென்றும் மாற்றி அமைக்கப்பட்டது. அது போலவே 51-A-ல் (K ) என்ற மற்றொரு அடிப்படைக் கடமை இணைக்கப்பட்டது. இப்புதிய கடமையின்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான கல்வி வசதியை அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை என்று குறிப்பிடப்பட்டது.
* 91-வது திருத்தம் (2003) - கட்சித் தாவல் குறித்த விதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. கீழவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 40 உள்ள இடங்களுக்கு மட்டுமே, அதிகபட்சம் 12 அமைச்சர்கள் என்று வரையறுக்கப்பட்டது.
* 92-வது திருத்தம் (2003) - மைதிலி, போடோ, டோக்ரி மற்றும் சாந்தலி ஆகிய மொழிகளின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
* 93-வது திருத்தம் (2006) - அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் திருத்தம்.
* 95-வது திருத்தம் (செப்2011) - எட்டாவது அட்டவணையில் ஒரியா மொழிப் பெயரை ஒடியா என திருத்த இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
Parts of the Constitution
Part-I - Union and its territories
Part-II - Citizenship
Part-III - Fundamental Rights
Part-IV - Directive Principles of State Policy
Part-IV A - Fundamental Duties
Part -V - Union
Part-VI - States
Part-VII - Repealed (Part-B of First Schedule)
Part-VIII - Union Territories
Part-IX - Panchayat Raj Institutions
Part-IXA - Municipalities
Part-X - Scheduled and Tribal areas
Part-XI - Centre State Relations
Part-XII - Finance, Property, Contracts and Suits,
Part-XIII - Trade, Commerce, Intercourse within the territory of india
Part-XIV - Services under the Union and States
Part-XIV A - Administrative Tribunals
Part-XV - Elections
Part-XVI - Special Provisions Relating to certain classes
Part-XVII - Official Languages
Part-XVIII - Emergency
Part-XIX - Miscellaneous Provisions
Part-XX - Amendment
Part-XXI - Temporary, transitional and Special Provisions
Part-XXII - Short title, Commencement and repeal of the Constitution

Wednesday, October 2, 2013

PG TAMIL மறுதேர்வு நடத்த உத்தரவு

  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறுதேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி, மறுதேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். 4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்பு கணக்கிடப் படும். எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும். இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.

Followers