முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள்:
* 1-வது திருத்தம்(1951) வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்துப்
பரிமாற்றம் மற்றும் எந்தப் பணியும் மேற்கொள்வது போன்றவற்றிற்குக்
கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு அனுமதி அளித்தது.
* 7-வது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட இத்திருத்தம் வகை செய்தது.
* 10-வது திருத்தம் (1960) தாத்ரா, நாகர் ஹவேலி போன்ற போர்ச்சுகீசிய காலனிகள் இந்திய ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டன.
*11-வது திருத்தம் (1961) - துணை குடியரசுத் தலைவரை
தேர்ந்ேதெடுப்பதற்கான உரிமை பாராளுமன்றத்தின் இருசபைக்கும் வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போரில்
காலியிடங்கள் உள்ளன என்று கூறி தேர்தலை எதிர்த்து வழக்கு போடுவதையும் இது
தடை செய்தது.
* 12-து திருத்தம் (1962) - கோவா, டாமன்-டையூ போன்ற இடங்கள் மத்திய ஆட்சிப் பகுதிகளாக்கப்பட்டன.
*13-வது திருத்தம் (1962) - நாகாலாந்தை இந்தியாவின் 16-வது மாநிலமாக்கியது.
* 14-வது திருத்தம் (1962) - பாராளுமன்றத்திற்கு மத்திய
ஆட்சிப்பகுதியில் சட்டப்பேரவைகளை உருவாக்க சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.
பாண்டிச்சேரி மத்திய ஆட்சிப்பகுதி ஆக்கப்பட்டது.
* 18-வது திருத்தம் (1966) - பஞ்சாபி மொழி பேசும்பகுதி பஞ்சாப்
என்றும், இந்தி மொழி பேசும் ஹரியானா என்றும் பஞ்சாப் இரண்டாகப்
பிரிக்கப்பட்டது.
* 21-வது திருத்தம் (1967) - சிந்தி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
* 24-வது திருத்தம் (1971) - அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும்
திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. இத்திருத்தத்தின்
சிறப்பம்சம் குடியரசுத் தலைவரின் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம்
நீக்கப்பட்டதே.
* 26-வது திருத்தம் (1971) - பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. மத்திய ஆட்சிப்பகுதி பாராளுமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது.
* 35-வது திருத்தம் (1974) - சிக்கிம் இணை மாநில அந்தஸ்து பெற்றது.
* 36-வது திருத்தம் (1975) - சிக்கிம் இந்தியாவில் 22-வது மாநிலமாக உருவானது.
* 41-வது திருத்தம் (1976) - மாநில தேர்வாணையக் குழு உறுப்பினர்களின் உச்ச வயதுவரம்பு 60-லிருந்து 62-ஆக உயர்த்தப்பட்டது.
* 42-வது திருத்தம் (1976) - இதன் முக்கிய நோக்கம் சரண்சிங்
கமிட்டியின் பரிந்துரைகளை அமல் செய்வதாகும். நீதித்துறையின் அதிகாரங்கள்
மட்டுப்படுத்தப்பட்டன. பாராளுமன்றம் மிகுந்த அதிகாரம் மிகுந்ததாக மாறியது.
அடிப்படை உரிமைகள் பட்டியல் உருவாக்கப்பட்டது.
* 44-வது திருத்தம் (1978) சுருங்கக் கூறின் 42-வது திருத்தம்
முழுவதுமாக திரும்ப்ப பெறப்பட்டது. சொத்துரிமை அடிப்படை உரிமை அன்று என்று
குறிப்பிடப்பட்டது. உள்நாட்டுக் குழப்பங்களுக்காக அவசர நிலைப்பிரகடனம்
செய்ய இயலாது. தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரை இரண்டு மாதத்திற்கு
மேல் காவலில் வைக்க பரிசீலனைக் குழுவின் முன் அனுமதி பெற வேண்டும்.
* 55-வது திருத்தம் (1986) - அருணாச்சலப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்து பெற வகை செய்கிறது.
* 56-வது திருத்தம் (1987) - கோவாவுக்கு முழு மாநில அந்தஸ்து
தரப்பட்டது. டாமன்-டையூ பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிப் பகுதியாக்கப்பட்டன.
* 58-வது திருத்தம் (1987) - அரசியலமைப்பின் அதிகாரப் பூர்வ இந்தி மொழி பெயர்ப்பை வெளியிட வகை செய்யும் திருத்தம்.
* 61-வது திருத்தம் (1989) - வாக்களிக்கும் வயது 21லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டது.
* 69-வது திருத்தம் (1991) - தில்லியை தேசிய தலைநகர ஆட்சிப்பகுதியாக அறிவித்தது.
* 70-வது திருத்தம் (1992) - தில்லி மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றின்
சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை
வழங்கியது.
* 71-வது திருத்தம் (1992) - கொங்கணி, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
* 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து இராஜ்யம் குறித்த விவரங்களைப் புகுத்தியது.
* 74-வது திருத்தம் (1992) - நகராட்சி குறித்த விவரங்களைப் புகுத்தியது.
* 86-வது திருத்தம் (2002) - 21-A என்ற புதிய ஷரத்தைப் புகுத்தியது.
மேலும் ஷரத்து 45, 6 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கல்வி அளிக்கவும்,
மற்றும் சிறார் பருவத்திற்கான வாய்ப்புக்களை அளிப்பதிலும், போதிய கவனத்தை
அரசு செலுத்த வேண்டுமென்றும் மாற்றி அமைக்கப்பட்டது. அது போலவே 51-A-ல் (K
) என்ற மற்றொரு அடிப்படைக் கடமை இணைக்கப்பட்டது. இப்புதிய கடமையின்படி 6
முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான கல்வி வசதியை அளிப்பது
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை என்று குறிப்பிடப்பட்டது.
* 91-வது திருத்தம் (2003) - கட்சித் தாவல் குறித்த விதிகளில்
கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின்
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவையின் மொத்த உறுப்பினர்களின்
எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. கீழவை
உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 40 உள்ள இடங்களுக்கு மட்டுமே, அதிகபட்சம்
12 அமைச்சர்கள் என்று வரையறுக்கப்பட்டது.
* 92-வது திருத்தம் (2003) - மைதிலி, போடோ, டோக்ரி மற்றும் சாந்தலி ஆகிய மொழிகளின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
* 93-வது திருத்தம் (2006) - அரசு மற்றும் தனியார் உயர்கல்வி
நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வழி
செய்யும் திருத்தம்.
* 95-வது திருத்தம் (செப்2011) - எட்டாவது அட்டவணையில் ஒரியா மொழிப் பெயரை ஒடியா என திருத்த இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
Parts of the Constitution
Part-I - Union and its territories
Part-II - Citizenship
Part-III - Fundamental Rights
Part-IV - Directive Principles of State Policy
Part-IV A - Fundamental Duties
Part -V - Union
Part-VI - States
Part-VII - Repealed (Part-B of First Schedule)
Part-VIII - Union Territories
Part-IX - Panchayat Raj Institutions
Part-IXA - Municipalities
Part-X - Scheduled and Tribal areas
Part-XI - Centre State Relations
Part-XII - Finance, Property, Contracts and Suits,
Part-XIII - Trade, Commerce, Intercourse within the territory of india
Part-XIV - Services under the Union and States
Part-XIV A - Administrative Tribunals
Part-XV - Elections
Part-XVI - Special Provisions Relating to certain classes
Part-XVII - Official Languages
Part-XVIII - Emergency
Part-XIX - Miscellaneous Provisions
Part-XX - Amendment
Part-XXI - Temporary, transitional and Special Provisions
Part-XXII - Short title, Commencement and repeal of the Constitution
No comments:
Post a Comment