Thursday, January 26, 2012

பத்ம விருதுகள் பெரும் தமிழர்கள்



பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தில் இருந்து 7 பேர் தேர்வு



        2012-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு 109 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.5 பத்ம விபூஷண் விருதுகளும், 27 பத்ம பூஷண் விருதுகளும், 77 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த விருது பெற உள்ளவர்களில் 19 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெறுவோர்:
பத்ம விபூஷண்
 எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்- வயலின் கலைஞர், 
டாக்டர் திருப்பூணித்துரா விஸ்வநாதன் கோபாலகிருஷ்ணன் - வாய்ப்பாட்டுக் கலைஞர், 
சுப்பையா முருகப்ப வெள்ளையன் - வணிகம் மற்றும் தொழில்துறை
பத்மஸ்ரீ
நடேசன் முத்துசாமி -கலை-தியேட்டர்
டாக்டர் பி.கே.கோபால் -சமூகப் பணி
டாக்டர் விஸ்வநாதன் மோகன் மருத்துவம்- சர்க்கரை நோய்
டாக்டர் வல்லார்புரம் சென்னிமலை நடராஜன் மருந்தியல்- முதியோர்நலம் 



காந்தப்புயல் - சில தகவல்கள்


சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள காந்தப்புயல் பூமியை இன்று மூன்று விதமாக வெவ்வேறு தருணங்களில் தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   சூரியனின் மேற்பரப்பில் இருந்து லட்சக்கணக்கான மின்அழுத்தம் கொண்ட கதிர் வீச்சுகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு வேதியியல் மாற்றங்களால் கதிர்வீச்சுகள் பெருமளவில் கொந்தளித்து அலைகளாக வீசும். இந்த நிகழ்ச்சி சூரியப்புயல் அல்லது சூரிய கதிர்வலைகள் எனப்படுகிறது.
விஞ்ஞானிகள் சிலர் இதை காந்தப்புயல் என்றும் கூறுகின்றனர். சூரியனில் உருவாகும் காந்தப்புயல், அங்கிருந்து கிளம்பி பல்வேறு கோள்களையும் சென்றடையும். அப்போது அந்த கோள்களில் சில பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் நிகழும்.  
கடந்த சில ஆண்டுகளாக சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் திடீர் வேதியியல் மாற்றங்கள் காரணமாக கடந்த 22-ந்தேதி சூரியனின் மேற்புறத்தில் அதிர்வலைகள் தோன்றின. அங்கிருந்து புறப்பட்ட சூரிய கதிர்வலைகள் ஒரு மணி நேரத்தில் பூமியை தாக்கியது.
தற்போது அதைவிட சக்தி வாய்ந்த காந்தப்புயல் (சூரிய கதிர்வலை) உருவாகியுள்ளது.   கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த காந்தப்புயல் இதுவாகும். இந்தப்புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் மூன்று தருணங்களில் வெவ்வேறு விதமாக நடைபெறும். முதலில் மின்காந்த தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக புரோட்டான்கள் நிறைந்த கதிர்வீச்சும், மூன்றாவதாக சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து புறப்பட்டு வரும் பிளாஸ்ரே கதிர் வீச்சும் பூமியை அடுத்தடுத்து தாக்கும்.
இந்த கதிர்வீச்சுகள் சூரியனின் மேற்பரப்பில் அடுத்தடுத்து தோன்றியவை ஆகும்.   காந்தப்புயலால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி டாக்பிசக்கர் கூறியதாவது:-
மூன்று கதிர்வீச்சுகளில் புரோட்டான் கதிர்வீச்சுகள் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த கதிர்வீச்சு 15 கோடி கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கிறது. இது சூரிய துகள்கள் பயணிக்கும் வேகத்தைப்போல் 5 மடங்கு அதிகம் ஆகும். பூமிக்கும், வியாழன் கிரகத்துக்கும் இடைப்பட்ட பிரபஞ்சப்பகுதி புரோட்டான்களால் நிறைந்துள்ளது. எனவே, இந்த கதிர்வீச்சு அந்த பிரபஞ்சத்தை கடுமையாக பாதிக்கும்.
கதிர்வீச்சு தன்மை இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்.   வடக்கு துருவ பகுதியில் அதிக சக்தி வாய்ந்த ரேடியோ தொலைத்தொடர்பு சாதனங்களை பாதிக்கும் என்பதால், விமானங்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம். எனவே, வடக்கு துருவ பகுதியில் இயக்கப்படும் விமானங்களின் பயணப்பாதையை மாற்றி இயக்க வேண்டும்.
செயற்கை கோள்களின் செயல்பாடுகளையும், பின் தொகுப்புகளையும் கூட இந்த கதிர்வீச்சுகள் பாதிப்பு அடையச் செய்யும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு, சூரிய கதிர் வீச்சு தாக்குதலால் பாதிப்பு ஏற்படலாம். எனினும் கடந்த 1989-ல் நிகழ்ந்த சூரியப்புயலைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும். பூமியின் வடதுருவத்தில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 1989-ல் தாக்கிய சூரிய புயலால், கனடா நாட்டின் கியூபெக் மாகாணம் முழுவதும் மின்விநியோகம் சீர்குலைந்து இருளில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 25, 2012

சமச்சீர் கல்வி புத்தகங்கள் DOWNLOAD

சமச்சீர் கல்வி புத்தகங்கள் DOWNLOAD செய்ய மேலே  சொடுக்கவும்.

Tuesday, January 24, 2012

GROUP-I பொது அறிவு - புயலுக்கு பெயர் வைத்தல்

புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


 தமிழகத்தையும் புதுவையையும் உலுக்கி எடுத்தது, ‘தானே’. இப்போது, ‘தானே’ போலவே சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜல்’, ‘லைலா’ போன்ற பெயர்களும் ஊடகங்களில் அடிபட்டன. புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


பிரத்யேகமான பெயர் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். புயல் குறித்த எச்சரிக்கைக்கும் அதன் பின் விளைவுகளை தெரிவிக்கவும் ஊடகங்களுக்கு இந்தப் பெயர் பெரிய அளவில் உதவியாக உள்ளது.


ஆரம்பத்தில் தன்னிச்சையாகவும் பின்பு பெண்களின் பெயரிலும் புயல்கள் குறிப்பிடப்பட்டன. அதன்பின் சர்வதேச அளவில் செயல்படும் வானிலை ஆய்வு மையம் பல நாடுகளும் சிபாரிசு செய்த பெயர்களை முறைப்படுத்தி, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப புயலுக்கு பெயர் வைக்கப்பட்டது.


உலக வானிலை அமைப்பில் (world metrological organization) இந்தியா, வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகளைக் கொண்ட குழு உள்ளது. வங்க, அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு இந்த நாடுகள் சிபாரிசு செய்த பெயர்களில் இருந்து பெயரிடும் முறை, 2004ம் ஆண்டு அக்டோபர் முதல் நடைமுறையில் உள்ளது.


இவை ஏற்கனவே கலாசாரத்தைப் பிரதிபலிக்கும், நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக உள்ள 64 பெயர்களைத் தேர்வு செய்துள்ளன. இதில் இதுவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான 28 புயல்களுக்கு 28 பெயர்கள் வைக்கப்பட்டு விட்டன. மற்ற பெயர்கள் இனி வரும் புயல்களுக்கு வைக்கப்படும். இதற்கு முன் வந்த புயல்களுக்கு ஒன்னி, நிஷா (வங்க தேசம்), ஆகாஷ், பிஜ்லி (இந்தியா), கோனு, அயலா  (மாலத்தீவு), ஏமின், பயர் (மியான்மர் ), சிடர், வார்த் (ஓமன்), நர்கீஸ், லைலா (பாகிஸ்தான்), ராஷ்மி, பந்து (இலங்கை), கைமுக் (தாய்லாந்து) ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டன.


‘தானே’, மியான்மர் நாடு தேர்வு செய்த பெயர்களில் ஒன்று. அடுத்த புயலுக்கு ஓமன் நாடு தேர்வு செய்த முர்ஜான் (murjaan) என்ற பெயர் இருக்கும்.

Followers