Monday, September 30, 2013

TET SPECIAL EXAM

          மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். 
இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்டபேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Wednesday, September 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு:இடஒதுக்கீடு கிடையாது

      ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அவர்வால், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால் தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

Saturday, September 21, 2013

GROUP-I MAINS EXAM POSTPONED

டி.என்.பி.எஸ்.சி சார்பி்ல் நடக்க உள்ள குரூப் -1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தியி்ல், குரூப்-1 க்கான முதன்மை தேர்வு செப். 27, 28, மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க விருந்ததது. தற்போது முதன்ம‌ை தேர்வு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 4, 2013

GROUP-II தேர்வு அறிவிப்பு

GROUP-II தேர்வு அறிவிப்பு -1064 பணியிடங்கள் 
    TNPSC நடத்தும் குரூப் 2 முதனிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது மொத்தம் 1064 நேர்முகத்தேர்வு பணியிடங்களுக்கான தேர்வு 2013 டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செப்டம்பர் 6-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 4, 2013. MAIN தேர்வுக்கு 1064*10=10640 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். முதனிலைத் தேர்வு (PRELIMS) கொள்குறிவகை வினாக்களைக் (OBJECTIVE) கொண்டதாக இருக்கும். தேர்வு பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Friday, May 10, 2013

TNPSC GR-II COACHING

விடியல் நடத்தும் TNPSC GROUP-II,  தேர்வு
 பயிற்சி வகுப்புகள் .
    TNPSC மூலம் விரைவில் நடத்தடப்படவுள்ள GROUP-II தேர்வுக்கு நமது வேலூர்  விடியல் பயிற்சி மையம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. முதல் நாள் பயிற்சி வகுப்புகள் 01-09-2013 ஞாயிறு அன்று தொடங்கப்படவுள்ளன. பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு: 9092997509.     

Monday, April 1, 2013

SUR-REGISTRAR FROM VIDIYAL

GROUP-II தேர்வில்  தேர்ச்சி பெற்று வேலூரில் பயிற்சி சார்பதிவாளராக பணி சேர்ந்துள்ள திரு.மணிகண்டன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்

Monday, November 26, 2012

TNTET COACHING @ VELLORE.

விடியல் நடத்தும் (TRB)-TNTET தேர்வு பயிற்சி வகுப்புகள் .
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013க்கு நமது வேலூர்  விடியல் பயிற்சி மையம்  பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு II BATCH பயிற்சி வகுப்புகள் MAY மூன்றாம் வாரம்   தொடங்கப்படவுள்ளன. . பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு:  . 9092997509,  8122706441.    

Friday, November 2, 2012

TET RESULTS (Supplementary Exam OCT 2012)

TNTET RESULTS
TRB அக்டோபர் 2012 ல் நடத்திய TET PAPER I & PAPER II தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும். www.trb.tn.nic.in

Tuesday, October 9, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - புதிய நடைமுறை

    
TET தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்


   பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

   ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

    ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

       இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

   தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:

     ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

     மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

   பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

        கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15
):
 90 சதவீதத்துக்கு மேல் ...................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்.....................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்.................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்...................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............-12
 50 சதவீதத்துக்கும் கீழே.................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்.................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42

TNPSC GROUP-IV RESULT

TNPSC GROUP-IV RESULT.
கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான தேர்ச்சி பெற்றோர் முதல் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

Wednesday, September 19, 2012

TET MODEL QUESTION - TAMIL

TNTET தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் PRACTICE செய்து பார்க்க 150 கேள்விகளைக் கொண்ட பயிற்சி வினாத்தாள் தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்.
TET 2013 MODEL QUESTION PAPER  - LANGUAGE TAMIL 

Thursday, August 2, 2012

TNPSC GROUP-II MARK LIST

           GROUP-II எனப்படும் CSSE-I தேர்வில் வெற்றி பெற்றோரின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை TNPSC வெளியிட்டுள்ளது . அவற்றைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
 http://www.tnpsc.gov.in/Resultget-csse_otcml2k110.html

Friday, July 27, 2012

TRB PG RESULT

TRB PG ASSISTANT தேர்வு முடிவுகளை TRB வெளியிட்டுள்ளது. அவற்றைக் காண இங்கே சொடுக்கவும். 
http://trb.tn.nic.in/PG2012/26072012/msg.htm

Monday, July 9, 2012

TNPSC GROUP-IV ANSWER KEYS & CUT-OFF

          TNPSC 07.07.2012 -ல் நடத்திய குரூப்--IV தேர்வுக்கான விடைகளை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

     இத்தேர்வுக்கான எதிர்பார்க்கப்படும் கட்--ஆப் விவரங்கள் தமிழ் நாடு முழுக்க உள்ள போட்டியாளர்களிடம் இருந்து ஸ்கோர்களை  பெற்ற பின்னர் ஓரிரு நாளில் வெளியிடப்படும் .

Saturday, June 23, 2012

TNPSC VAO COACHING CLASSES

               TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு நமது வேலூர்  விடியல் பயிற்சி மையம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. பயிற்சி வகுப்புகள் JULY 21 அன்று   தொடங்கப்படவுள்ளன. . பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு: 9092997509.

Followers