Monday, January 12, 2015
Sunday, January 11, 2015
Saturday, January 10, 2015
Sunday, December 28, 2014
Tuesday, December 23, 2014
Sunday, December 21, 2014
இன்று நடந்த GROUP IV தேர்வுக்கான விடியலின் உத்தேச விடைகள் இங்கு வெளியிடப்படுகின்றன. உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
https://vidiyalarni.files.wordpress.com/2014/12/group-iv-exam-answer-key-21-12-2014-tentative.pdf
https://vidiyalarni.files.wordpress.com/2014/12/group-iv-exam-answer-key-21-12-2014-tentative.pdf
Tuesday, November 4, 2014
Sunday, October 26, 2014
Tuesday, August 12, 2014
FACULTIES WANTED
PG TRB தேர்வுக்கு வரலாறு, தமிழ், விலங்கியல், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நோக்கில் வகுப்பெடுக்க FACULTIES தேவை. PG WITH B.Ed or MPhil தகுதி பெற்றிருக்கவேண்டும். PG தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு: தொடர்பு கொள்ளவும்.
The Course Director, Vidiyal Coaching Centre,
Vellore. Cell: 9626549593
Tuesday, August 5, 2014
வேலையின்மையும் போட்டித்தேர்வுகளும்
வேலையின்மையும் போட்டித்தேர்வுகளும்
எழுபதுகளிலும் அதற்கு முன்பும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தாலே அது பெருமைக்குரிய விஷயம். எண்பதுகளில் ஒரு இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் அதுவும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது. தொண்ணூறுகளில் பொறியியல் பட்ட மோகம் வந்து பணம் காய்க்கும் IT துறைகளில் ஒரு தா(க்)கத்தை ஏற்படுத்தியதும் உண்மை. அடுத்த பத்தாண்டுகளில் பல்கிப் பெருகிய பொறியியல் கல்லூரிகளால் அதிகரித்த பட்டதாரிகளின் எண்ணிக்கையினால் பொறியியல் படிப்புக்கும் வேலையின்மை ஏற்பட்டு 2014ல் அவர்களின் நிலை குறித்து ஒரு திரைப்படம் எடுத்து அதை அவர்களுக்கே DEDICATE செய்ய வேண்டிய பரிதாப நிலை.
ஆனால் எழுபதுகள் ஆனாலும் சரி, 2014 ஆனாலும் சரி (இடையில் ஓர் அய்ந்தாண்டு காலம் தவிர) என்றுமே எண்ணற்ற தமிழக இளைஞர்களின் கலங்கரை விளக்கமாக நின்று களம் அமைத்து தருவது TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான்.
அந்த தேர்வுகள் ஒருவரின் எதிர்காலத்தை மட்டும் நிர்ணயிப்பதில்லை. நிலையான ஒரு பொருளாதார ஆதரவையும் நமக்களிக்கிறது.
அது மட்டுமா?
பட்டப் படிப்பு வரை ஒரு சராசரி மாணவனாகவே இருக்கும் பலரை சாதனை மனிதனாக்குவதும் இந்த தேர்வுகளே. தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை எந்த ஆசிரியரும் எனக்குக் கற்றுத் தராத போர்க்குணத்தை இரண்டு மூன்று போட்டித்தேர்வுகள்தான் எனக்கு கற்றுக்கொடுத்தன.
விளையாட்டுப் பருவத்தில் நாம் கற்ற கல்வி அடிப்படைக் கல்வி என்றால் வேலை தேடும் பருவத்தில் நாம் கற்கும் கல்விதான் நமக்கு வாழ்வியலைக் கற்றுத்தருகிறது. பல களங்களை அறிமுகப்படுத்துகிறது. பல தோல்விகளை நம் தோள்களில் சுமத்துகிறது. அன்றாட போராட்டங்களை பழகிக்கொள்ளும் வகையில் நம்மை செம்மைப்படுத்துகிறது. இறுதியில் வெற்றி மேல் வெற்றி பெற்ற போதும் போதை தராமல் பொறுமை கொள்ள செய்கிறது.
எனவே எத்தனை லட்சம் பேர் களத்தில் நின்றாலும் உங்கள் பாதை தெளிவானதாகவும் , சரியானதாகவும் இருக்கும் போது பயணம் சுமையாக இராது. இலக்கு ஒரு நாள் எட்டப்படும் . வானமும் ஒரு நாள் வசப்படும். வசந்தம் உங்கள் வாசல் வரும்.
தொடரட்டும் உங்கள் பயணம் . தோல்விகளைத் தோற்கடிக்கும் வரை...
Friday, July 25, 2014
Sunday, July 6, 2014
GROUP-IIA EXPECTED CUT-OFF (Vidiyal Prediction)
29.06.2014ல் நடைபெற்ற குரூப்-IIA தேர்வுக்கான TNPSC விடைகளின் அடிப்படையில் கணிப்பு செய்து விடியல் பயிற்சி மையத்தின் இந்த கட்-ஆப் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்
Sunday, June 29, 2014
இன்று நடந்த குரூப்-IIA தேர்வில் கேட்கப்பட்ட பொதுத்தமிழ் கேள்விகளுக்குரிய உத்தேச விடைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. .
இது பற்றிய உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
Tuesday, May 13, 2014
வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் குரூப்-IIA தேர்வாளர்களுக்கு 12-வது பயிற்சித் தேர்வாக உயிரியல் தேர்வு நடைபெறவுள்ளது. VAO தேர்வாளர்களுக்கு இந்த வாரம் 7-வது பயிற்சித்தேர்வாக பொதுத்தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தேர்வும் நடைபெறவுள்ளன. கடந்த வாரம் GROUP-IIA-க்கு நடந்த Indian National Movement பகுதியில் 200 வினாக்களைக்கொண்டு நடத்தப்பட்ட பயிற்சித்தேர்வில் N.RAJASEKARAN 177/200 மதிப்பெண்களைப் பெற்று வகுப்பில் முதலிடம் பெற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கும் விடியல் மைய இயக்குனர் ஊக்கப் பரிசு வழங்கினார்.
Monday, March 24, 2014
இன்று தொடங்கிய குரூப் 4 கலந்தாய்வில் பங்கு பெற்று பணி நியமன ஆணையுடன் விரைவில் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்க இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் இனிய நல்வாழ்த்துகள். அரசுப் பணியில் பல பதவி உயர்வுகள் பெற்று அரசுப்பணிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கவும் விடியல் உங்களுக்காக பிரார்த்திக்கிறது.
Saturday, March 15, 2014
விடியல் மையங்கள்
விடியல் பயிற்சி மையம் வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே விடியல் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். அவர்களுக்கும் விடியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.
TNPSC GROUP IV C.V க்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு !
நண்பர் மணியின் ஒட்டுமொத்த ரேங்க் 4784. இனவாரியான ரேங்க் (பி.வ) 2598. இவருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது என பதிவு செய்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துகள் . இதன் மூலம் சுமார் 5000 ஒட்டுமொத்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கும் அழைப்பு கடிதம் விரைவில் வரும் என நம்பலாம்.
அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பப்படுவதாக தெரிகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே 4784க்கும் குறைவாக ரேங்க் உள்ளவர்கள் கவலைப்படவேண்டாம். கண்டிப்பாக அழைப்புக்கடிதம் வரும். நீங்கள் அஞ்சல் அலுவலரோடு தொடர்பில் இருங்கள். மேலும் 3469 பணியிடங்களுக்கு 5000 ரேங்க் வரை அழைப்பு வருவது என்பது எப்படி என்றால் ஏற்கனவே குரூப் 2 NON -OT பணியிடங்களில் தேர்வாகி உள்ளவர்கள் குரூப் 4 பணியிடங்களுக்கு வரமாட்டார்கள் என்பதை எதிர்பார்த்து கூடுதலாக அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டிருக்கலாம் . அதுமட்டுமல்லாமல் PSTM (PERSONS STUDIED IN TAMIL MEDIUM) பிரிவில் வருபவர்களுக்கும் 3500க்கும மேல் ரேங்க் இருந்தாலும் வர வாய்ப்புள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Labels
- 2012 (1)
- COACHING CLASS (1)
- CSSE-I (1)
- GROUP-2 (1)
- GROUP-II (3)
- MARK LIST (1)
- TET 2013 (1)
- TET MODEL QUESTION (1)
- TET RESULTS (1)
- TNPSC (1)
- TNPSC MODEL QUESTION PAPER (1)
- TNPSC VAO (1)
- TNTET (1)
- TRB PG RESULT (1)
- VAO (1)