Thursday, January 26, 2012

காந்தப்புயல் - சில தகவல்கள்


சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள காந்தப்புயல் பூமியை இன்று மூன்று விதமாக வெவ்வேறு தருணங்களில் தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   சூரியனின் மேற்பரப்பில் இருந்து லட்சக்கணக்கான மின்அழுத்தம் கொண்ட கதிர் வீச்சுகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு வேதியியல் மாற்றங்களால் கதிர்வீச்சுகள் பெருமளவில் கொந்தளித்து அலைகளாக வீசும். இந்த நிகழ்ச்சி சூரியப்புயல் அல்லது சூரிய கதிர்வலைகள் எனப்படுகிறது.
விஞ்ஞானிகள் சிலர் இதை காந்தப்புயல் என்றும் கூறுகின்றனர். சூரியனில் உருவாகும் காந்தப்புயல், அங்கிருந்து கிளம்பி பல்வேறு கோள்களையும் சென்றடையும். அப்போது அந்த கோள்களில் சில பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் நிகழும்.  
கடந்த சில ஆண்டுகளாக சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் திடீர் வேதியியல் மாற்றங்கள் காரணமாக கடந்த 22-ந்தேதி சூரியனின் மேற்புறத்தில் அதிர்வலைகள் தோன்றின. அங்கிருந்து புறப்பட்ட சூரிய கதிர்வலைகள் ஒரு மணி நேரத்தில் பூமியை தாக்கியது.
தற்போது அதைவிட சக்தி வாய்ந்த காந்தப்புயல் (சூரிய கதிர்வலை) உருவாகியுள்ளது.   கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த காந்தப்புயல் இதுவாகும். இந்தப்புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் மூன்று தருணங்களில் வெவ்வேறு விதமாக நடைபெறும். முதலில் மின்காந்த தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக புரோட்டான்கள் நிறைந்த கதிர்வீச்சும், மூன்றாவதாக சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து புறப்பட்டு வரும் பிளாஸ்ரே கதிர் வீச்சும் பூமியை அடுத்தடுத்து தாக்கும்.
இந்த கதிர்வீச்சுகள் சூரியனின் மேற்பரப்பில் அடுத்தடுத்து தோன்றியவை ஆகும்.   காந்தப்புயலால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி டாக்பிசக்கர் கூறியதாவது:-
மூன்று கதிர்வீச்சுகளில் புரோட்டான் கதிர்வீச்சுகள் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த கதிர்வீச்சு 15 கோடி கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கிறது. இது சூரிய துகள்கள் பயணிக்கும் வேகத்தைப்போல் 5 மடங்கு அதிகம் ஆகும். பூமிக்கும், வியாழன் கிரகத்துக்கும் இடைப்பட்ட பிரபஞ்சப்பகுதி புரோட்டான்களால் நிறைந்துள்ளது. எனவே, இந்த கதிர்வீச்சு அந்த பிரபஞ்சத்தை கடுமையாக பாதிக்கும்.
கதிர்வீச்சு தன்மை இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்.   வடக்கு துருவ பகுதியில் அதிக சக்தி வாய்ந்த ரேடியோ தொலைத்தொடர்பு சாதனங்களை பாதிக்கும் என்பதால், விமானங்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம். எனவே, வடக்கு துருவ பகுதியில் இயக்கப்படும் விமானங்களின் பயணப்பாதையை மாற்றி இயக்க வேண்டும்.
செயற்கை கோள்களின் செயல்பாடுகளையும், பின் தொகுப்புகளையும் கூட இந்த கதிர்வீச்சுகள் பாதிப்பு அடையச் செய்யும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு, சூரிய கதிர் வீச்சு தாக்குதலால் பாதிப்பு ஏற்படலாம். எனினும் கடந்த 1989-ல் நிகழ்ந்த சூரியப்புயலைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும். பூமியின் வடதுருவத்தில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 1989-ல் தாக்கிய சூரிய புயலால், கனடா நாட்டின் கியூபெக் மாகாணம் முழுவதும் மின்விநியோகம் சீர்குலைந்து இருளில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers