Friday, November 29, 2013

ATTENTION GROUP-II ASPIRANTS..

குரூப்-II தேர்வெழுதும் நண்பர்களுக்கு...

1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .

2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .

3.முதல் வாசிப்பில் சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டும் புள்ளியோ அல்லது சிறிய அளவிலான டிக்கோ அடித்து குறித்து கொள்ளுங்கள் .

4.இரண்டாவது வாசிப்பில் தெரியாத வினாக்களுக்கான விடைகளையும் முடிவு செய்து கொள்ளுங்கள். 

5.முதலில் உமக்கு தோன்றிய விடைகளை இரண்டாவது வாசிப்பில் மாற்ற வேண்டாம்.

6.ஒவ்வொரு வினாக்களுக்கு விடை அளிக்கும்போதும் வினா எண்ணில் விரலை வைத்து சரியான விடையினை மார்க் செய்யவும்.

7.தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம் என்றெண்ணி அங்கொன்றும் இங்கொன்றுமாக விடையளிக்க வேண்டாம். இதனால் டபுள் ஷேடிங் ஏற்பட வாய்ப்புள்ளது.

8.நான்கு OPTION னுமே தெரியாத வினாக்களுக்கு ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.( 20 வினாக்களுக்கு விடை தெரியவில்லை என்றால் அந்த 20 வினாக்களுக்கும் ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.)

9.கடைசி 45 நிமிடங்களில் 1-200 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

10.மிக முக்கியமானது நேர நிர்வாகம். ஒவ்வொரு அரை மணித்துளிகளுக்கும் கடந்து வந்த நேரத்தை கவனியுங்கள். REASONING போன்ற நெடுநேரம் யோசிக்க வைக்கும் வினாக்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதற்கேற்ப திட்டமிடுங்கள். COMPLETE YOUR ANSWER SHEET . 200 வினாக்களுக்கும் நீங்கள் படித்து விடையளித்தாலே PRELIMS வெற்றி சாத்தியமாகும் .  

அனைவரும் PRELIMS தேர்வில் வெற்றி பெற விடியலின் நல்வாழ்த்துகள் .

Thursday, November 28, 2013

NOTA பட்டன்

Electronic Voting Machine -ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது  NOTA பட்டன் .  EVM -ல் அனைத்து வேட்பாளர்களின் சின்னங்களுக்கு கீழே கடைசியாக இந்த NOTA பட்டன் அமைந்திருக்கும். அதன் காரணமாகவே மேற்கண்ட எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் None Of The Above என்பதன் சுருக்கமே NOTA .

Thursday, November 7, 2013

TET RESULT - VIDIYAL STATE RANKER

வேலூர் விடியல் பயிற்சி மைய மாணவி திருமதி.J .ரேவதி TET முதல் தாளில் 118 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 12-வது RANK பெற்றுள்ளார். அவரையும் இதர 84 சாதனையாளர்களையும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கி பல நல்லாசிரியர் விருதுகள் பெற்றிட வாழ்த்துகிறோம்.

Wednesday, November 6, 2013

TET RESULTS - VIDIYAL ACHIEVERS

153 பேர் தேர்ச்சி
2013 TET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி எமது விடியல் பயிற்சி மையங்களிலிருந்து மொத்தம் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் வேலூர் விடியல் மையத்தில் மட்டும் 93 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு காரணமான அனைத்து பயிற்றுனர்களுக்கும் நன்றியினை விடியல் தெரிவித்துக்கொள்கிறது. வேலூர் விடியலில் பயின்றவர்களில் 66 பேர் இரண்டாம் தாளிலும், 27 பேர் முதல் தாளிலும் வெற்றி பெற்றுள்ளனர். வணங்கத்தக்க மகத்தான ஆசிரியர் பணிக்கான சுற்று வட்ட பாதையில் இணைந்துள்ள விடியல் மங்கள்யான்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.                       .



 மேகம்                  
தொட்டதில் 
மகிழ்ச்சி.. 
வானம் 
வசப்பட 
வாழ்த்துகள்.

Followers