153 பேர் தேர்ச்சி
2013 TET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி எமது விடியல் பயிற்சி மையங்களிலிருந்து மொத்தம் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் வேலூர் விடியல் மையத்தில் மட்டும் 93 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு காரணமான அனைத்து பயிற்றுனர்களுக்கும் நன்றியினை விடியல் தெரிவித்துக்கொள்கிறது. வேலூர் விடியலில் பயின்றவர்களில் 66 பேர் இரண்டாம் தாளிலும், 27 பேர் முதல் தாளிலும் வெற்றி பெற்றுள்ளனர். வணங்கத்தக்க மகத்தான ஆசிரியர் பணிக்கான சுற்று வட்ட பாதையில் இணைந்துள்ள விடியல் மங்கள்யான்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். .
மேகம்
தொட்டதில்
மகிழ்ச்சி..
வானம்
வசப்பட
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment