Monday, March 24, 2014

       இன்று தொடங்கிய குரூப் 4 கலந்தாய்வில் பங்கு பெற்று பணி  நியமன ஆணையுடன் விரைவில் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்க இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் இனிய நல்வாழ்த்துகள். அரசுப் பணியில் பல பதவி உயர்வுகள் பெற்று அரசுப்பணிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கவும் விடியல் உங்களுக்காக பிரார்த்திக்கிறது.

Saturday, March 15, 2014

விடியல் மையங்கள்

      விடியல் பயிற்சி மையம் வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே விடியல் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். அவர்களுக்கும் விடியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.  

         எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.


TNPSC GROUP IV C.V க்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு !

   நண்பர் மணியின் ஒட்டுமொத்த ரேங்க் 4784. இனவாரியான ரேங்க் (பி.வ) 2598. இவருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது என பதிவு செய்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துகள் . இதன் மூலம் சுமார் 5000 ஒட்டுமொத்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கும் அழைப்பு கடிதம் விரைவில் வரும் என நம்பலாம். 

       அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பப்படுவதாக தெரிகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே 4784க்கும் குறைவாக ரேங்க் உள்ளவர்கள் கவலைப்படவேண்டாம். கண்டிப்பாக அழைப்புக்கடிதம் வரும். நீங்கள் அஞ்சல் அலுவலரோடு தொடர்பில் இருங்கள். மேலும் 3469 பணியிடங்களுக்கு 5000 ரேங்க் வரை அழைப்பு வருவது என்பது எப்படி என்றால் ஏற்கனவே குரூப் 2 NON -OT பணியிடங்களில் தேர்வாகி உள்ளவர்கள் குரூப் 4 பணியிடங்களுக்கு வரமாட்டார்கள் என்பதை எதிர்பார்த்து கூடுதலாக அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டிருக்கலாம் . அதுமட்டுமல்லாமல் PSTM (PERSONS STUDIED IN TAMIL MEDIUM) பிரிவில் வருபவர்களுக்கும் 3500க்கும மேல் ரேங்க் இருந்தாலும் வர வாய்ப்புள்ளது. 

Saturday, March 8, 2014

மகளிர் தின நல்வாழ்த்துகள் !

அன்னையாய் ..
ஆச்சியாய் ...
அன்பு சகோதரியாய்..
இல்லத்தரசியாய் 
நின்று ...
நெறிப்படுத்தி
எம்மை
இயக்கிக்கொண்டிருக்கும்
மகளிர் மனங்களுக்கு
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துகள் !

Wednesday, March 5, 2014

GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF

     குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். ஆனால்  அவ்வாறு இல்லை என்பதே உண்மை. மொத்தமுள்ள 3469 பணியிடங்களை இனவாரியாக பிரித்தால் பொதுப் பிரிவினருக்கு 1075 பணியிடங்களும், பிற்பட்ட வகுப்பினருக்கு 919 பணியிடங்களும், மிக பிற்பட்ட வகுப்பினருக்கு 694 பணியிடங்களும், ஆதிதிராவிட வகுப்பினருக்கு 624 பணியிடங்களும் (அருந்ததியர் உட்பட), பழங்குடியினருக்கு 35 பணியிடங்களும் , முஸ்லிம்களுக்கு 122 பணியிடங்களும் நிரப்பப்படும். இதிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடும் அடங்கும்.

   ஆனாலும் பொதுப்பிரிவினர் என்ற வரையறைக்குள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் பங்கு பெற முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 100 முதல் 200  பேர் வரை கூடுதலாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.  எனவே இதனைப்  புரிந்து உங்களின் பணி  வாய்ப்பை பற்றி   ஒரு முடிவுக்கு வரலாம். உங்கள் அனைவருக்கும் பணி கிடைக்க விடியலின் நல்வாழ்த்துகள் . அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தராமல் இருக்க நிஜத்தை புரிந்து பணி கிடைக்கும் நிலை இருந்தால் கொண்டாடுங்கள் . வாய்ப்பு குறைவாக இருந்தால் மேலும் போராடுங்கள் . 
   வெளியாகியிருக்கிற மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது நமது விடியல் வெளியிட்ட கட் ஆப் ஓரளவு துல்லியமாகவே பொருந்தும் என்றே தோன்றுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை எமது கட்-ஆப் ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள் . நன்றி. CUT-OFF விவரங்களுக்கு கிளிக் செய்க: www.vidiyalarni.blogspot.in



Followers