Wednesday, March 5, 2014

GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF

     குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். ஆனால்  அவ்வாறு இல்லை என்பதே உண்மை. மொத்தமுள்ள 3469 பணியிடங்களை இனவாரியாக பிரித்தால் பொதுப் பிரிவினருக்கு 1075 பணியிடங்களும், பிற்பட்ட வகுப்பினருக்கு 919 பணியிடங்களும், மிக பிற்பட்ட வகுப்பினருக்கு 694 பணியிடங்களும், ஆதிதிராவிட வகுப்பினருக்கு 624 பணியிடங்களும் (அருந்ததியர் உட்பட), பழங்குடியினருக்கு 35 பணியிடங்களும் , முஸ்லிம்களுக்கு 122 பணியிடங்களும் நிரப்பப்படும். இதிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடும் அடங்கும்.

   ஆனாலும் பொதுப்பிரிவினர் என்ற வரையறைக்குள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் பங்கு பெற முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 100 முதல் 200  பேர் வரை கூடுதலாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.  எனவே இதனைப்  புரிந்து உங்களின் பணி  வாய்ப்பை பற்றி   ஒரு முடிவுக்கு வரலாம். உங்கள் அனைவருக்கும் பணி கிடைக்க விடியலின் நல்வாழ்த்துகள் . அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தராமல் இருக்க நிஜத்தை புரிந்து பணி கிடைக்கும் நிலை இருந்தால் கொண்டாடுங்கள் . வாய்ப்பு குறைவாக இருந்தால் மேலும் போராடுங்கள் . 
   வெளியாகியிருக்கிற மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது நமது விடியல் வெளியிட்ட கட் ஆப் ஓரளவு துல்லியமாகவே பொருந்தும் என்றே தோன்றுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை எமது கட்-ஆப் ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள் . நன்றி. CUT-OFF விவரங்களுக்கு கிளிக் செய்க: www.vidiyalarni.blogspot.in



No comments:

Post a Comment

Followers