Sunday, December 21, 2014

இன்று நடந்த GROUP IV தேர்வுக்கான விடியலின் உத்தேச விடைகள் இங்கு வெளியிடப்படுகின்றன. உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
https://vidiyalarni.files.wordpress.com/2014/12/group-iv-exam-answer-key-21-12-2014-tentative.pdf

TNPSC GROUP IV Vidiyal Answer Keys (GT & GK) Tentative

Tuesday, August 12, 2014

FACULTIES WANTED

      PG TRB தேர்வுக்கு வரலாறு, தமிழ், விலங்கியல், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நோக்கில் வகுப்பெடுக்க FACULTIES தேவை. PG WITH B.Ed or MPhil தகுதி பெற்றிருக்கவேண்டும். PG தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு: தொடர்பு கொள்ளவும்.
The Course Director, 
Vidiyal Coaching Centre, 
Vellore. Cell: 9626549593

Tuesday, August 5, 2014

வேலையின்மையும் போட்டித்தேர்வுகளும்

வேலையின்மையும் போட்டித்தேர்வுகளும் 
      எழுபதுகளிலும் அதற்கு முன்பும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தாலே அது பெருமைக்குரிய விஷயம்.  எண்பதுகளில் ஒரு இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் அதுவும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது. தொண்ணூறுகளில் பொறியியல் பட்ட மோகம் வந்து பணம் காய்க்கும்  IT துறைகளில் ஒரு தா(க்)கத்தை ஏற்படுத்தியதும் உண்மை. அடுத்த பத்தாண்டுகளில் பல்கிப் பெருகிய பொறியியல் கல்லூரிகளால் அதிகரித்த பட்டதாரிகளின் எண்ணிக்கையினால் பொறியியல் படிப்புக்கும் வேலையின்மை ஏற்பட்டு 2014ல் அவர்களின் நிலை குறித்து ஒரு திரைப்படம் எடுத்து அதை அவர்களுக்கே DEDICATE செய்ய வேண்டிய பரிதாப நிலை.

    ஆனால் எழுபதுகள் ஆனாலும் சரி,  2014 ஆனாலும் சரி (இடையில் ஓர் அய்ந்தாண்டு காலம் தவிர) என்றுமே எண்ணற்ற தமிழக இளைஞர்களின் கலங்கரை விளக்கமாக நின்று களம் அமைத்து தருவது TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான்.

    அந்த தேர்வுகள் ஒருவரின் எதிர்காலத்தை மட்டும் நிர்ணயிப்பதில்லை. நிலையான ஒரு பொருளாதார ஆதரவையும் நமக்களிக்கிறது. 
அது மட்டுமா?
       பட்டப் படிப்பு வரை ஒரு சராசரி மாணவனாகவே இருக்கும் பலரை சாதனை மனிதனாக்குவதும் இந்த தேர்வுகளே. தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை எந்த ஆசிரியரும் எனக்குக் கற்றுத் தராத போர்க்குணத்தை இரண்டு மூன்று போட்டித்தேர்வுகள்தான் எனக்கு கற்றுக்கொடுத்தன.

           விளையாட்டுப் பருவத்தில் நாம் கற்ற கல்வி அடிப்படைக் கல்வி என்றால் வேலை தேடும் பருவத்தில் நாம் கற்கும் கல்விதான் நமக்கு வாழ்வியலைக் கற்றுத்தருகிறது. பல களங்களை அறிமுகப்படுத்துகிறது. பல தோல்விகளை நம் தோள்களில் சுமத்துகிறது. அன்றாட போராட்டங்களை பழகிக்கொள்ளும் வகையில் நம்மை செம்மைப்படுத்துகிறது. இறுதியில் வெற்றி மேல் வெற்றி பெற்ற போதும் போதை தராமல் பொறுமை கொள்ள செய்கிறது.

     எனவே எத்தனை லட்சம் பேர் களத்தில் நின்றாலும்  உங்கள் பாதை தெளிவானதாகவும் , சரியானதாகவும் இருக்கும் போது பயணம் சுமையாக இராது. இலக்கு ஒரு நாள் எட்டப்படும் . வானமும் ஒரு நாள் வசப்படும். வசந்தம் உங்கள் வாசல் வரும். 
தொடரட்டும் உங்கள் பயணம் . தோல்விகளைத் தோற்கடிக்கும் வரை...

Sunday, July 6, 2014

GROUP-IIA EXPECTED CUT-OFF (Vidiyal Prediction)

29.06.2014ல் நடைபெற்ற குரூப்-IIA தேர்வுக்கான TNPSC விடைகளின் அடிப்படையில் கணிப்பு செய்து விடியல் பயிற்சி மையத்தின் இந்த கட்-ஆப் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்

Sunday, June 29, 2014


      இன்று நடந்த குரூப்-IIA தேர்வில் கேட்கப்பட்ட பொதுத்தமிழ்  கேள்விகளுக்குரிய  உத்தேச விடைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. . 

இது பற்றிய உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பதியுங்கள்.

Tuesday, May 13, 2014

       வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் குரூப்-IIA தேர்வாளர்களுக்கு 12-வது பயிற்சித் தேர்வாக உயிரியல் தேர்வு நடைபெறவுள்ளது. VAO தேர்வாளர்களுக்கு இந்த வாரம் 7-வது பயிற்சித்தேர்வாக பொதுத்தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தேர்வும்  நடைபெறவுள்ளன. கடந்த வாரம் GROUP-IIA-க்கு நடந்த Indian National Movement பகுதியில் 200 வினாக்களைக்கொண்டு நடத்தப்பட்ட  பயிற்சித்தேர்வில் N.RAJASEKARAN  177/200 மதிப்பெண்களைப் பெற்று வகுப்பில் முதலிடம்  பெற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து  தெரிவித்தனர். அவருடன்  இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கும் விடியல் மைய இயக்குனர் ஊக்கப் பரிசு வழங்கினார்.

Monday, March 24, 2014

       இன்று தொடங்கிய குரூப் 4 கலந்தாய்வில் பங்கு பெற்று பணி  நியமன ஆணையுடன் விரைவில் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்க இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் இனிய நல்வாழ்த்துகள். அரசுப் பணியில் பல பதவி உயர்வுகள் பெற்று அரசுப்பணிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கவும் விடியல் உங்களுக்காக பிரார்த்திக்கிறது.

Saturday, March 15, 2014

விடியல் மையங்கள்

      விடியல் பயிற்சி மையம் வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே விடியல் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். அவர்களுக்கும் விடியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.  

         எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.


TNPSC GROUP IV C.V க்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு !

   நண்பர் மணியின் ஒட்டுமொத்த ரேங்க் 4784. இனவாரியான ரேங்க் (பி.வ) 2598. இவருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது என பதிவு செய்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துகள் . இதன் மூலம் சுமார் 5000 ஒட்டுமொத்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கும் அழைப்பு கடிதம் விரைவில் வரும் என நம்பலாம். 

       அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பப்படுவதாக தெரிகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே 4784க்கும் குறைவாக ரேங்க் உள்ளவர்கள் கவலைப்படவேண்டாம். கண்டிப்பாக அழைப்புக்கடிதம் வரும். நீங்கள் அஞ்சல் அலுவலரோடு தொடர்பில் இருங்கள். மேலும் 3469 பணியிடங்களுக்கு 5000 ரேங்க் வரை அழைப்பு வருவது என்பது எப்படி என்றால் ஏற்கனவே குரூப் 2 NON -OT பணியிடங்களில் தேர்வாகி உள்ளவர்கள் குரூப் 4 பணியிடங்களுக்கு வரமாட்டார்கள் என்பதை எதிர்பார்த்து கூடுதலாக அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டிருக்கலாம் . அதுமட்டுமல்லாமல் PSTM (PERSONS STUDIED IN TAMIL MEDIUM) பிரிவில் வருபவர்களுக்கும் 3500க்கும மேல் ரேங்க் இருந்தாலும் வர வாய்ப்புள்ளது. 

Saturday, March 8, 2014

மகளிர் தின நல்வாழ்த்துகள் !

அன்னையாய் ..
ஆச்சியாய் ...
அன்பு சகோதரியாய்..
இல்லத்தரசியாய் 
நின்று ...
நெறிப்படுத்தி
எம்மை
இயக்கிக்கொண்டிருக்கும்
மகளிர் மனங்களுக்கு
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துகள் !

Wednesday, March 5, 2014

GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF

     குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். ஆனால்  அவ்வாறு இல்லை என்பதே உண்மை. மொத்தமுள்ள 3469 பணியிடங்களை இனவாரியாக பிரித்தால் பொதுப் பிரிவினருக்கு 1075 பணியிடங்களும், பிற்பட்ட வகுப்பினருக்கு 919 பணியிடங்களும், மிக பிற்பட்ட வகுப்பினருக்கு 694 பணியிடங்களும், ஆதிதிராவிட வகுப்பினருக்கு 624 பணியிடங்களும் (அருந்ததியர் உட்பட), பழங்குடியினருக்கு 35 பணியிடங்களும் , முஸ்லிம்களுக்கு 122 பணியிடங்களும் நிரப்பப்படும். இதிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடும் அடங்கும்.

   ஆனாலும் பொதுப்பிரிவினர் என்ற வரையறைக்குள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் பங்கு பெற முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 100 முதல் 200  பேர் வரை கூடுதலாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.  எனவே இதனைப்  புரிந்து உங்களின் பணி  வாய்ப்பை பற்றி   ஒரு முடிவுக்கு வரலாம். உங்கள் அனைவருக்கும் பணி கிடைக்க விடியலின் நல்வாழ்த்துகள் . அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தராமல் இருக்க நிஜத்தை புரிந்து பணி கிடைக்கும் நிலை இருந்தால் கொண்டாடுங்கள் . வாய்ப்பு குறைவாக இருந்தால் மேலும் போராடுங்கள் . 
   வெளியாகியிருக்கிற மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது நமது விடியல் வெளியிட்ட கட் ஆப் ஓரளவு துல்லியமாகவே பொருந்தும் என்றே தோன்றுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை எமது கட்-ஆப் ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள் . நன்றி. CUT-OFF விவரங்களுக்கு கிளிக் செய்க: www.vidiyalarni.blogspot.in



Friday, January 24, 2014

TET CENTURY BY VIDIYAL VELLORE.

VELLORE VIDIYAL 188 NOT OUT....


வேலூர் வெயில் சதமடிக்கும் என்பது பழைய செய்தி.
வேலூர் விடியல் சதமடித்துள்ளது புதிய செய்தி. 

ஆம். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 188 (Original Result and 5% Relaxation Result) பேர் வேலூர் விடியலில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த Faculties அனைவருக்கும் விடியலின் இதயங்கனிந்த நன்றி.

Followers